2025 மே 19, திங்கட்கிழமை

பசுக்களை கடத்திச்சென்ற வானுக்கு துப்பாக்கிச்சூடு; மேலும் மூவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 15 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு,கனகராசா சரவணன்

அம்பாறை, தாண்டியடிக் கிராமத்திலிருந்து 03 பசுக்களை கடத்திச்சென்ற குற்றச்சாட்டின் பேரில் மேலும் 03 பேரை இன்று திங்கட்கிழமை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 26ஆம் திகதி, தாண்டியடிக் கிராமத்திலிருந்து 03 பசுக்களை  கடத்திக்கொண்டு சாகாமம் காட்டுப்பாதையூடாக சென்ற வானை நிறுத்துமாறு  விசேட அதிரடிப்படையினர் சமிக்ஞை காட்டினர். இருப்பினும், அச்சமிக்ஞையை மீறிச் சென்ற அவ்வான் மீது விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டை அடுத்து குறித்த வான் தாலிபோட்ட ஆற்றினுள் விழுந்ததுடன், அப்பசுக்களை கடத்தியோரும் தப்பிச்சென்றிருந்தனர். இந்நிலையில், குறித்த பசுக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டன.  

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு கடந்த மாதம் 31ஆம் திகதி இரத்தினபுரியில் 02 பேரைக் கைதுசெய்து அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், இவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.  
இதனை அடுத்து, ஹம்பாந்தோட்டையைச் சேர்ந்த 02 பேரையும் பொத்துவிலைச் சேர்ந்த ஒருவரையும் கைதுசெய்துள்ளதாகக் கூறிய பொலிஸார், பொத்துவிலைச் சந்தேக நபரிடமிருந்து அதிசொகுசு வாகனமொன்றைக் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவித்தனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் பிரதான சந்தேக நபர்களைத் தேடி வருவதாகவும் பொலிஸார் கூறினர்.   

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X