2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

பசுக்களுடன் இருவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 19 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா, எஸ். ஜமால்டீன்

15 பசுக்களை வதைப்படுத்தி லொறியொன்றில் ஏற்றிவந்த குற்றச்சாட்டில் இருவரை அம்பாறை, சாகாமம் சவக்காலைப் பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை (18) இரவு பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், லொறியுடன் குறித்த பசுக்களையும் பாதுகாப்பாகப் பொலிஸார் மீட்டுள்ளனர்.

மொனராகலை,  புத்தலப் பகுதியிலிருந்து வந்த குறித்த லொறியை வழிமறித்துச் சோதனையிட்டபோது, அதற்குள் ஒரு பசு இறந்து காணப்பட்டதுடன், 14 பசுக்களும் போதிய இடவசதியின்றி சிரமப்பட்டுக் காணப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X