2025 மே 22, வியாழக்கிழமை

பட்டமளிப்பு விழாவை தென்கிழக்கு பல்கலையில் நடத்த வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 18 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சி.அன்சார்

தென்கிழக்குப் பல்கலைக்கழத்தின்; பட்டமளிப்பு விழாவை அப்பல்கலைக்கழகத்தில் நடத்துமாறு மாணவர்களும் பெற்றோர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இப்பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா எதிர்வரும் மார்ச் மாதம் கொழும்பில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால், பட்டம் பெறும் பட்டதாரிகள் மட்டுமல்லாது, அவர்களின் பெற்றோர்களும்   மிகுந்த சிரமங்களை எதிர்நோக்க வேண்டி நேரிடும்.

இதன்போது சுமார் 700 க்கும் மேற்பட்டோர் பட்டங்களைப்  பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இப்பட்டமளிப்பு விழாவுக்காக இவர்கள் தங்களின் குடும்பங்களுடன் கொழும்பு செல்வதற்கு பெருந்தொகைப் பணம் செலவளிக்க நேரிடுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பட்டமளிப்பு விழாவை கொழும்பில் நடத்துவதற்காக பல்கலைக்கழகத்தினால் 6.4 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.இவ்வாறான வீண் விரயத்தை தவிர்த்து எதிர்வரும் காலங்களில் பட்டமளிப்பு வைபவங்களை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடத்துவதன் மூலம் அசௌரியகங்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வோண்டுமெனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X