2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

பனங்காட்டுக் கிராமத்தில் வயிற்றுப்போக்கினால் பாதிக்கப்படுவோர் அதிகரிப்பு

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 09 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்  

அம்பாறை, ஆலையடிவேம்புப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனங்காட்டுக் கிராமத்தில் கடந்த 06 மாதங்களாக வயிற்றுப்போக்கினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பனங்காட்டு பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர் யு.எல்.எம்.சகீல் தெரிவித்தார்.

இந்நிலையில், வயிற்றுப்போக்குக் காரணமாக நாளொன்றுக்கு சுமார் 05 பேர் வரை சிகிச்சை பெறுவதுடன், மாதமொன்றுக்கு சுமார் 150 பேர் வரை சிகிச்சை பெறுவதாகவும் இன்று திங்கட்கிழமை அவர் கூறினார்.  

இக்கிராம மக்கள் அருந்துகின்ற குடிநீரே வயிற்றுப்போக்குக்கு பிரதான காரணமாகும். இக்கிராமத்திலுள்ள பெரும்பாலான கிணறுகளின் நிலத்தன்மையிலுள்ள மாற்றம் காரணமாக ஊற்றெடுக்கும் நீர் சுத்தமற்றதாகக் காணப்படுகின்றது. இந்த நீரை அருந்துவதினாலேயே இந்நிலைமை ஏற்படுவதாகவும் அவர் கூறினார்.   எனவே, கொதித்தாறிய நீரை அருந்துமாறும் மக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது இவ்வாறிருக்க, ஆலையடிவேம்புப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளுக்கு  நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் நீர் விநியோகம் இடம்பெறுகிறது. ஆனால், பனங்காட்டுக் கிராமத்துக்கான நீர் விநியோகத்துக்கான இணைப்பு இதுவரையில்  வழங்கப்படவில்லை.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .