2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பப்பாசி செய்கை அறுவடை விழா

Niroshini   / 2016 மே 17 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார், நடராஜன் ஹரன், கனகராசா சரவணன்

ஐ. எல். ஓ (I.L.O) நிறுவனத்தின் நிதியுதவியுடன் கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட பப்பாசி செய்கைக்கான அறுவடை விழா, நேற்று(16 ) கோமாரி விவசாயப் போதனாசிரியர் பிரிவுக்குட்பட்ட ஊறணி கனகர் கிராமத்தில் பிரதேச விவசாயப் போதனாசிரியர் எஸ்.சித்திரன்  தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் கே.சிவநாதன் பிரதம அதிதியாகவும்  சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாணத்தின் பிரதி மாகாண விவசாயபணிப்பாளர் ஆர்.ஹரிகரன், அம்பாறை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் டி.எம்.எஸ்.பி. திசநாயக்க, லாகுகல வலய உதவி விவசாயப் பணிப்பாளர் எம்.ஐ. இஸ்மாலெவ்வை உள்ளிட்ட பாடவிதான உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது, விவசாய திணைக்களத்தினால் பப்பாசி செய்கையினை ஊக்குவிக்கும் பொருட்டு பிளாஸ்ரிக் கூடைகளும், நீர் இறைக்கும் குழாய்களும் விவசாயிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் நோக்கில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் பப்பாசிப்பயிர்ச் செய்கையின் விஸ்தீரணத்தை எதிர்காலத்தில் அதிகரிப்பதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதேச விவசாயப் போதனாசிரியர் எஸ். சித்திரன் இங்கு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X