2025 ஜூலை 14, திங்கட்கிழமை

பரீட்சை எழுதுவதற்கு அனுமதி

Niroshini   / 2015 டிசெம்பர் 03 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட இறக்காமம் அல்-அஷ்ரப் மத்திய கல்லூரியில் இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றுவதற்கான அனுமதி வழங்க மறுக்கப்பட்ட 36 மாணவர்களுக்கு, பரீட்சை எழுதுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் சௌதுல் நஜீம் இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

இறக்காமம் பிரதேசத்தில் திங்கட்கிழமை (30) இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த 151 மாணவர்களில் 36 பேருக்கு அப்பரீட்சைக்கு தோற்றுவதற்கான அனுமதி அதிபரால் வழங்கப்படவில்லை, என்பதை காரணம் காட்டி ஒரு மாணவன் தற்கொலை செய்வதற்கென வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திருந்தது.

மேற்படி பரீட்சையில்,பாடசாலையின் பெறுபேற்றை அதிகரித்து காட்டும் நோக்குடன் 115 மாணவர்களுக்கு மாத்திரமே க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கென அதிபரால் விண்ணப்பிக்கப்பட்டு அவர்களுக்கான அனுமதி அட்டைகளும் பரீட்சைத் திணைக்களத்தினால் அனுப்பி வைக்கப்பட்டன.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் கிளர்ந்தெழுந்ததைத் தொடர்ந்து பாடசாலையில் திங்கட்கிழமை(30) அமைதியின்மை ஏற்பட்டது.

இது தொடர்பில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ். தண்டாயுதபாணி மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோர் மேற்கொண்ட நடவடிக்கைக்கிணங்க,பரீட்சை ஆணையாளரால் குறித்த மாணவர்களுக்கு பரீட்சைக்கு தோற்றுவதற்கான அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும், தற்கொலை முயற்சிக்கு, வீட்டை விட்டு வெளியேறிய மாணவன் ஞாயிற்றுக்கிழமை (29) கொழும்பு, களனிப் பாலதத்துக்கு அருகிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டார்.

பாதிக்கப்பட்ட மாணவர்கள், அதிபரின் அச்சுறுத்தல், எச்சரிக்கைகளால் தாம் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு வாக்கு மூலம் அளித்துள்ளனர்.

இதேவேளை, பாடசாலை அதிபர் எம்.எம். இஸ்மாயில் செவ்வாய்க்கிழமை (01) பரீட்சைத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .