Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2015 செப்டெம்பர் 16 , மு.ப. 07:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பள்ளிக்குடியிருப்பு பிரதான வீதி கடந்த 30 வருடங்களாக திருத்தியமைக்கப்படாது குன்றும் குழியுமாக காணப்படுகின்றது
தோப்பூர் பள்ளிக்குடியிருப்பு, சின்னக்குளம், பாட்டாளிபுரம், தங்கபுரம், இத்திக்குளம், வீரமாநகர், நல்லூர் சீனம்வெளி, உப்பூரல், சோலையூர், சம்பூர், கடற்கரைச்சேனை, இலக்கந்தை, இக்பால்நகர் இலங்கைதுறை முகத்துவாரம் (லங்காபட்டினம்) போன்ற பல்வேறு கிராம மக்கள், இந்த வீதியைத் தமது போக்குவரத்துக்குப் பயன்படுத்தி வருகின்றனர்.
25 கிலோமீற்றர் நீளமுள்ள இவ்வீதியை சாதாரணமாக நாளொன்றுக்கு 6,000க்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்துகின்றனர்.
சேதமடைந்துள்ள இவ்வீதியைச் செப்பனிட்டுத் தருமாறு இக்கிராம மக்களால், வீதி அமைச்சு, மாகாண வீதி அமைச்சு, பிரதேச செயலகம் உட்பட ஆளும் கட்சி எதிர்க்கட்சி நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களிடமும் வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டு மகஜர்களும் கையளிக்கப்பட்டும் எவரும்; இதுவரை இதுபற்றி கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த வீதியைப் புனரமைத்து தருமாறு கோரி, கடந்த வருடம் பாரிய ஆர்ப்பாட்டமும் முன்னேடுக்கப்பட்;டது. மாணவர்கள், நோயாளிகள், முதியவர்கள் போன்றோர் இதில் பெரிதும் பாதிப்படுகிறார்கள்.
தோப்பூர் வைத்தியசாலைக்கு நோயாளிகளை விரைவாகக் கொண்டு செல்ல முடியாத துர்பாக்கிய நிலையிலேயே இம்மக்கள் வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
6 minute ago
27 minute ago
59 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
27 minute ago
59 minute ago
2 hours ago