Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2021 ஒக்டோபர் 14 , பி.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ்.மௌலானா
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்தும் சூழ்ச்சிகளுக்கு, கிழக்கு மாகாணத்தை சேர்ந்த எமது கட்சிப் போராளிகள் ஒருபோதும் துணை போகமாட்டார்கள் என, அக்கட்சியின் சாய்ந்தமருது மத்திய குழு தெரிவித்துள்ளது.
இது குறித்து மேற்படி மத்திய குழு சார்பாக அதன் செயலாளரும் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான ஏ.ஜலால்தீன், இன்று (14) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;
“சமீப காலமாக எமது முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்தும் நோக்கில், கட்சியின் தலைமைத்துவத்துக்கு எதிராக கிழக்கு மாகாணத்தில் சவால் விடுக்கப்படுவதாக வெளியிடப்படும் கருத்துகளில் எவ்வித உண்மையும் கிடையாது.
“வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற தமிழ் பேசும் சமூகங்களுக்கிடையிலும் தென்னிலங்கை பெரும்பான்மை சமூகத்தினருடனான நல்லுறவுக்குமான ஓர் இணைப்புப் பாலமாக திகழ்கின்ற ஒரே தலைமையாக ரவூப் ஹக்கீம் திகழ்கிறார்.
“2,000ஆம் ஆண்டு ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப்பின் திடீர் மறைவைத் தொடர்ந்து ரவூப் ஹக்கீம், இக்கட்சியை பொறுப்பேற்று, இன்றுவரை பல்வேறு கட்டங்களில் ஏற்பட்ட பாரிய சவால்களுக்கு எல்லாம் தைரியமாக முகங்கொடுத்து, அச்சவால்களையெல்லாம் வெற்றிகொண்டு, கட்சியை மிகவும் கட்டுக்கோப்புடன் வழிநடத்தி வருகிறார்.
“அனைத்து விடயங்களிலும் முன்மாதிரியாகத் திகழ்கின்ற எமது கட்சியையும் அதன் தலைமைத்துவத்தையும் பலப்படுத்த வேண்டிய கடப்பாட்டை எமது கட்சிப் போராளிகள் கொண்டிருக்கிறார்கள். இது விடயத்தில் அவர்களிடம் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
“கட்சியில் பிரிவினையைத் தோற்றுவிக்க எத்தனிக்கும் வெளிச்சக்திகளின் தூண்டுதல்களுக்கு எமது போராளிகள் ஒருபோதும் துணை போக மாட்டார்கள் என்பது திண்ணம்” எனத் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
3 hours ago
4 hours ago