2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

மா அரிக்கும் இயந்திரம் கண்டு பிடிப்பு

Niroshini   / 2015 ஒக்டோபர் 22 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.றம்ஸான்

கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் உயர்தர தொழில்நுட்ப பிரிவில் கல்வி பயிலும் மாணவன் ஏ.எம்.எம்.சௌபாத் குறைந்த மின்சாரத்தில் இயங்கும் சூழலுக்கு கழிவாக அகற்றப்படும் பொருட்களை பயன்படுத்தி மிக்குறைந்த செலவில் மா அரிக்கும் இயந்திரமொன்றை  கண்டு பிடித்து சாதனை படைத்துள்ளார்

கழிவாக வீசப்படும் பழைய மரத்துண்டுகள், ஆணிகள், வயர்கள், பாவித்த கொம்புயுட்டர் அடிச்சட்டம், கம்பிகள், அங்கர் வெற்றுப் பெட்டி என்பவற்றை பயன்படுத்தி தயாரித்துள்ள இம் மாவிடிக்கும் இயந்திரத்தை மின்சாரத்தை வழங்கி இயக்குகின்றார்.

உயர்தர தொழில்நுட்ப பிரிவு பகுதித் தலைவர் ஏ.ஆதம்பாவா கருத்து தெரிவிக்கையில்,

கல்லூரியில் உயர்தர தொழில்நுட்ப பிரிவு 2012ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதில் கணிசமான தொகையில் முஸ்லிம் மாணவர்களும் தமிழ் மாணவர்களும் கல்வி பயின்று வருகின்றனர்.

கல்முனைத் தொகுதியில் இக்கல்லூரியில் மட்டுமே உயர்தர தொழில்நுட்ப பிரிவு மிகவும் வெற்றிகரமாக இயங்கி வருகின்றது. இதன் முதல் தொகுதி மாணவர்கள் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கும் தோற்றியுள்ளனர்.

இத்துறையில் கல்வி பயிலும் மாணவர்கள் புத்தக கல்வியுடன் மட்டும் நின்று விடாது புத்தாக்க முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இம்மாணவன் உட்பட இன்னும் பல மாணவர்களும் தற்போது பலவிதமான ஆக்க முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X