2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

மு.கா தலைமைக்கு எதிராக செயற்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தீர்மானம் நிறைவேற்றம்

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 04 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைமைக்கு எதிராகச் சதி நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் எவராக இருந்தாலும், அவர் மீது எத்தகைய நடவடிக்கையையும் எடுப்பதற்கான முழு அங்கிகாரத்தையும் அக்கட்சித் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமுக்கு வழங்குவதாக மு.கா.வின் கல்முனைத்தொகுதி மத்தியகுழு ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

மு.கா.வின் எதிர்கால வளர்ச்சியைக் கருத்திற்;கொண்டு 'வீட்டுக்கு வீடு மரம்' எனும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி மு.கா.வுடன் மக்களை ஒன்றிணைப்பது தொடர்பில் ஆராய்வதற்கான கூட்டம், சாய்ந்தமருது சுகாதார மத்திய நிலையத்தில் சனிக்கிழமை (02) இரவு நடைபெற்றது. இதன்போதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்போது, அண்மைக்காலமாக கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடு மற்றும் நெருக்கடிகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், கட்சியைப் பலப்படுத்துவதற்காக கட்சித் தலைமை முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X