Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Niroshini / 2015 ஒக்டோபர் 25 , மு.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
சிறுவர் துஷ்பிரயோகத்தினை ஒழிப்பது மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் நிந்தவூர் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு அறிவுறுத்தும் விசேட நிகழ்வு நேற்று சனிக்கிழமை நிந்தவூர் அல்-மஷ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையில் நடைபெற்றது.
நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசலின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாகவும் வளவாளராகவும் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.எம்.உபுல் பிரியலால், பொலிஸ் பரிசோதகரும் சம்மாந்துறை பொலிஸ் நிலைய சமூக சேவை பொலிஸ் பொறுப்பதிகாரியுமான எஸ்.எம்.அமீர், நிந்தவூர் கோட்டக் கல்வி அதிகாரி எ.எல்.எம்.சலீம், நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் ஏ.எம்.இஸ்மாயில் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.எம். உபுல் பிரியலால் cரையாற்றுகையில்,
எதிர்காலத்தில் முச்சக்கர வண்டிகளில் பிள்ளைகளை பாடசாலைக்கு அழைத்துச் செல்லுபவர்களுக்கு விசேட செயற்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் இதற்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையம் மற்றும் நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசல் ஆகியவற்றின் ஒருங்கமைப்புடனான 'விசேட ஸ்டிக்கர்' வழங்கப்படுவதாகவும் இந்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட முச்சக்கர வண்டிகள் மாத்திரமே மாணவர்களை பாடசாலைக்கு அழைத்துச் செல்லும் சேவையில் ஈடுபட முடியும் எனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago