2025 மே 19, திங்கட்கிழமை

முச்சக்கரவண்டி புரண்டதில் சாரதிக்கு காயம்

Kanagaraj   / 2016 ஓகஸ்ட் 01 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

 

 

 

 

 

 

 

 


-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

கல்முனையிலிருந்து காரைதீவு நோக்கிச் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டிக்குக் குறுக்கால் கட்டாக்காலி நாயொன்று சென்றதனால், முச்சக்கரவண்டி புரண்டு விபத்துக்குள்ளனதில் சாரதி காயமடைந்துள்ளார்.

இவ்விபத்து, கல்முனை பிரதான வீதியில் இன்று, திங்கட்கிழமை (01) காலை இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
காயங்களுக்குள்ளானவர், கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏ.எம். றிஸ்வி என்ற 28 வயதானவர் என்பவரே இவ்வாறு காயங்களுக்குள்ளாகியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.  போக்குவரத்துப் பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X