2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

மாடுகளைத் திருடியவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 16 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

அம்பாறை, அக்கரைப்பற்று -பொத்துவில் வீதியை அண்டியுள்ள மாட்டுப்பட்யொன்றிலிருந்து 95 ஆயிரம் ரூபாய் பெறுமதியான  02 மாடுகளை திருடிய குற்றச்சாட்டின் பேரில் 38 வயதுடைய இறைச்சிக்கடை உரிமையாளர் ஒருவரை திங்கட்கிழமை (15) இரவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை (05) இடம்பெற்ற இத்திருட்டுச் சம்பவம் தொடர்பில் ஏற்கெனவே மூவர் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, இன்று செவ்வாய்க்கிழமைவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இச்சந்தேக நபர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த இறைச்சிக்கடை உரிமையாளரைக் கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X