2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

மோட்டார் சைக்கில்களை வழங்க வேண்டும்

Kogilavani   / 2016 ஜனவரி 22 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எல்.எம்.சினாஸ்

அம்பாறை மாவட்ட வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கில் வழங்க வேண்டும் என அம்பாறை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கடந்த ஆட்சிக் காலத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கு மாணிய அடிப்படையில் மோட்டார் சைக்கில் வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கில் வழங்கப்பட்டது. எனினும் அம்பாறை மாவட்டத்தில் மட்டும் வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கில்கள் வழங்கப்படவில்லை.

மானிய அடிப்படையில் மோட்டார் சைக்கிலை பெற்றுக்கொள்வதற்கு பணம் செலுத்துவதற்கு முறையான அறிவுறுத்தல்கள் அப்போதைய மாவட்ட அரசாங்க அதிபரினால் அறிவிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்படுகிறது.

எனினும் மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு தேசிய வரவு செலவுத்திட்ட பணிப்பாளர் நாயகத்தினால் டீனுஃபுPளுஃ130ஃ9ஃ14ஃஆஊ  எனும் இலக்க 2014.09.30ஆம் திகதியிடப்பட்ட கடிதம்மூலம் மானிய அடிப்படையில் மோட்டார் சைக்கில் வழங்குவதற்கான ஆரம்ப கொடுப்பனவை செலுத்தும்படி உரிய வெளிக்கள உத்தியோகத்தர்களை அறிவுறுத்துமாறு வேண்டி பணத்தை செலுத்துவதற்கான குறியீட்டு இலக்கமும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தல் திணைக்கள தலைவர்களுக்கு அறிவிக்கப்படாமையால் அம்பறை மாவட்டத்தில் சுமார் 5000 வெளிக்கள உத்தியோகத்தர்கள் மோட்டார் சைக்கில் பெறமுடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்னிலையில் தற்போது தேசிய வரவு செலவுத்திட்ட பணிப்பாளர் நாயகம் ஏ.ஆர். தேசப்பிரியவினால் டீனுஃபுPளுஃ130ஃ9ஃ14ஃஆஊ -11 எனும் இலக்க 2016.01.1 ஆம் திகதிய கடிதம் மூலம் மானிய அடிப்படையில் மோட்டார் சைக்கில் பெற்றுக் கொள்வதற்காக 2015.11.20 ம் திகதிக்கு முன்னர் பணம் செலுத்தியவர்கள் மற்றும் மோட்டார் சைக்கில் பெற்றுக்கொள்ளும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தகைமை பெற்ற வெளிக்கள உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையையும் கோரப்பட்டுள்ளது. இதற்கான இறுதித் திகதி 2016.01.22 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தலுக்கமைய அம்பாறை மாவட்டத்தில் கடமையாற்றும் சகல வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கும் மோட்டார் சைக்கில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அம்பாறை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X