2025 மே 21, புதன்கிழமை

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 20 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா, ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை, நிந்தவூர் பிராதான வீதி பொது நூலகம் முன்பாக நேற்று செவ்வாய்க்கிழமை (19) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞனொருவர் ஸ்திலத்திலேயே பலியாகியுள்ளதாக சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
 
இவ்வாறு பலியானவர், பிரதான வீதியூடாக ஒலுவிலிலிருந்து கல்முனை நோக்கிச் சென்ற வேளை, நிந்தவூர் குறுக்கு வீதியூடாக வந்து பிரதான வீதியைச் சென்றடைந்த மற்றுமொரு மோட்டர் சைக்கிள் மோதியதியே இவ்விபத்து இடம்பெற்றதாக நேரில் கண்ட பொதுமக்கள் தெரிவித்தனர்.

மாளிகைக்காடு 02ஆம் பிரிவைச் சேர்ந்த ஏ.ஆர். றமீஸ் (வயது 27) என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளார். 
 
இவருடன் மோதி விபத்துக்குள்ளான மற்றை மோட்டார் சைக்கிளன் ஓட்டுனர் தப்பித்துச் சென்று விட்டதாகவும் அருகிலுள்ள சி.சி.டி.வி  கமெராவின் உதவியைப் பெற்று அந்நபரைக் கைதுசெய்யும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகப் சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X