2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

முதியோரை ஒதுக்கக்கூடாது

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 26 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் மௌலானா

நாட்டுக்கு சுமையானவர்கள் என்று கருதி முதியோரை நாம் ஒதுக்கக்கூடாது. அவர்கள் எந்த நிலையிலும் அரவணைத்து பராமரிக்கப்பட வேண்டியவர்களென  அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம்.ஐ.அமீர் தெரிவித்தார்.

அம்பாறை, தெஹியத்தக்கண்டி பிரதேச செயலக மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பு விழாவில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'முதியோர்  துன்புறுத்தப்படுவது மற்றும் ஓரங்கட்டப்படுவது வேதனைக்குரிய விடயமாகும்' என்றார்.

'சில சந்தர்ப்பங்களில்; முதியவர்களின் சக்திக்கு அப்பால் கடுமையான வேலைகள் வழங்கப்படுகின்றன. அதேவேளை அவர்களை பராமரிப்பதில் அலட்சியம் காட்டப்படுகிறது. சிலர் முற்றாக கைவிடப்படுகின்றனர். இன்னும் சிலர் முதியோர் இல்லங்களில் சேர்த்து விடப்படுகின்றனர்.

இவ்வாறானவற்றைத் தவிர்ப்பதற்காகவே முதியோரை மதித்து அவர்களின் திறமைகள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்காக அரசாங்கத்தினால் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், சிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பு  நிகழ்வுகளும்; நடத்தப்படுகின்றன' எனத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X