Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 நவம்பர் 26 , மு.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
அகில இலங்கை சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் சங்கம் மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகஸ்;தர்கள் சங்கத்தின் அம்பாறை மாவட்டத்துக்கான வருடாந்த மாநாடு, அம்பாறை நகர மண்டபத்தில் நாளை வெள்ளிக்கிழமை காலை 09 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக அகில இலங்கை சமுர்த்தி உத்தியோகஸ்;தர் சங்கத்தின் உபதலைவர் ஐ.எச்.ஏ.வஹாப் தெரிவித்தார்.
அகில இலங்கை சமுர்த்தி உத்தியோகஸ்தர் சங்கத்தின் தலைவர் இஸ்திரி கமகே தலைமையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டின்போது, திவிநெகும அபிவிருத்தி உத்தியோகஸ்;தர்களினதும் விவசாய ஆராய்ச்சி உத்தியோகஸ்தர்களினதும் ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை பற்றி கலந்துரையாடப்படவுள்ளது. அத்துடன், எதிர்காலத் திட்டங்கள் தொடர்பிலும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இம்மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள திவிநெகும அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களுக்கு அதன் திணைக்களத்தினால் கடமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
3 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago