2025 மே 20, செவ்வாய்க்கிழமை

முன்னோடிப் பரீட்சை

Suganthini Ratnam   / 2016 ஜூன் 10 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்  

2016ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சைக்குத்; தோற்றும் மாணவர்களின் நலன் கருதி  திருக்கோவில் வலயக்கல்வி அலுவலகம் ஏற்பாடு செய்துள்ள முன்னோடிப் பரீட்சை, ஆலையடிவேம்பு கல்விக் கோட்டத்துக்கு உட்பட்ட பாடசாலைகளில் இம்மாதம் 12ஆம் திகதி நடைபெறும் என கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.இராசமாணிக்கம் தெரிவித்தார்.

வலயக்கல்விப்பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜனின் வழிகாட்டலில் நடைபெறவுள்ள இப்பரீட்சையில் அனைத்து மாணவர்களையும் பங்குபற்ற செய்யுமாறும் அவர் பாடசாலைகளின் அதிபர்களை கேட்டுக்கொண்டார்.

இதேவேளை பிரதிக் கல்விப் பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரன் தலைமையில் 25ஆம் திகதி மற்றுமொரு பரீட்சை திருக்கோவில் வலயத்துக்குட்பட்ட அனைத்து பாடசாலை மாணவர்களையும் உள்ளடக்கியதாக நடைபெறும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அக்கரைப்பற்று இராமகிருஸ்ண மகா வித்தியாலயம், கோளாவில் விநாயகர் மகாவித்தியாலயம், தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலயம், கோரைக்களப்பு சக்தி வித்தியாலயம், கோமாரி மெதடிஸ்த மகாவித்தியாலயம் மற்றும் பொத்துவில் மெதடிஸ்த மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் பரீட்சைகள் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X