2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

முன்னாள் செயலாளருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 02 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.டி.பியசேனவின் முன்னாள் செயலாளர் தா.ஜெயாகர் என்பவரை 10 இலட்சம் ரூபாய் நிதி மோசடி தொடர்பாக மீண்டும் எதிர்வரும் 8ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவானும் மேலதிக மாவட்ட நீதவானுமாகிய திருமதி நளினி கந்தசாமி நேற்று வியாழக்கிழமை (01) உத்தரவிட்டார்

ஆலையடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர், குறித்த செயலாளரிடம் 10 இலட்சம் ரூபாய் பணத்தை வழங்கியுள்ளதாகவும் வழங்கிய பணத்தை மீளப் பெற்றுத்தருமாறும் பணத்தை வழங்கியவர் கல்முனை விசேட பெரும் குற்றத் தடுப்பு பிரிவில்  முறைப்பாடு செய்திருந்தார்.

இதனை அடுத்து குறித்த செயலாளரை கடந்த மாதம் 25ஆம் திகதி கைதுசெய்து அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில்  நீதவான் திருமதி நளினி கந்தசாமி முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது அவரை நேற்று 01ஆம்  திகதிவரை 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். இந்நிலையில், குறித்த செயலாளரை நேற்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X