2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வுக்கு வாங்கிய நிதிகள் எங்கே?

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 08 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

இலங்கை அரசினால் கடந்த காலங்களில் முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு பெற்றுக்கொடுக்கப் போவதாகத் தெரிவித்து வெளிநாடுகளில் இருந்து பெற்றுக்கொண்ட கோடிக்கணக்கான பொருட்கள், நிதிகளுக்கு என்ன நடந்தது? என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கட்சி செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் விநாயகபுரம் பாடசாலையில் நேற்று வியாழக்கிழமை (07) மாலை இடம்பெற்ற மாணவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் மேற்படி கேள்வியினை எழுப்பியுள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

முன்னாள் போராளிகள் சமூகத்தினரால் கௌரமாக நடத்தப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஓர் இனத்தின் விடுதலைக்காக தங்களின் வாழ்க்கையை தியாகம் செய்தவர்கள். இவ்வாரானவர்கள் இன்று தங்களில் குடும்ப வாழ்கையைச் செம்மையாக முன்னெடுக்க முடியாது சிரமப்படுகின்றார்கள்.

இவர்கள் உடல் அபயங்களை இழந்துள்ளதுடன், மனரீதியாகவும் தாழ்வு நிலையில் வாழ்ந்து வருகின்றனர். அரசு வாயளவில் முன்னாள் போராளிகளுக்கான வாழ்வாதார மேம்பாடுகளை முன்னெடுக்காது செயல் வடிவில் உதவிகளை வழங்கி இவர்களும், இவர்களது பிள்ளைகளும் சமூகத்தில் கௌரவத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்வதங்கான நடவடிக்கைகளை செய்து கொடுக்க வேண்டும்.

தமிழர்கள் என்ற காரணத்தினால் முன்னாள் போராளிகள் புனர்வாழ் என்ற பெயரில் உடல் சித்திரவதைகளுக்கு உள்ளாகி மூன்று, நான்கு வருடங்களின் பின்னர் மனநோயாளிகளாக தெருவில் விடப்பட்டிருக்கின்றார்கள். 

ஆனால், இந்த நாட்டில் ஜே.வி.பியினரும் முன்பு ஆயுதம் தாங்கி போராடியவர்கள். அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு தற்போது நாடாளுமன்றம் வரை சென்று பலம்மிக்க சக்தியாகஇருந்து வருகின்றார்கள். இதற்குக் காரணம் அவர்கள் சிங்களவர்கள் என்ற காரணம்தான்.

இதனை மறந்து இந்த நல்லாட்சி அரசின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் இவர்களின் வாழ்க்கைக்கு ஓர் ஆரோக்கியமான பாதையை அமைத்துக் கொடுக்க வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X