Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Princiya Dixci / 2015 டிசெம்பர் 13 , மு.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
பொதுமக்களின் மேம்பாடு கருதி அரசாங்கத்தினால் மானியமாக அல்லது இலவசமாக வழங்கப்படுகின்ற பொருட்களை விற்பனைசெய்யும் பயனாளிகளுக்கெதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மத் ஹனீபா தெரிவித்தார்.
மட்டக்களப்பு, ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவில் வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள 80 குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்துக்கான உதவிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு, பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மத் ஹனீபா தலைமையில் ஏறாவூர் அல்ஜுப்ரியா வித்தியாலயத்தில் சனிக்கிழமை (12) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டின் 36 இலட்ச ரூபாய் நிதியொதுக்கீட்டில் 40 தையல் இயந்திரங்கள், 12 துவிச்சக்கரவண்டிகள், கூரைத் தகடுகள், மின்சார இணைப்புக்கான உதவிகள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு அலுவலக உபகரணங்கள்ஆகிய பகிர்ந்தளிக்கப்பட்டன.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதேச செயலாளர் முஹம்மத் ஹனீபா,
வறிய மக்களை எவ்வாறாயினும் முன்னேற்ற வேண்டும் என்பதற்காகவே நாம் அவர்களது காலடிக்குத் தேடிச் சென்று உதவி வழங்குகின்றோம். ஆயினும், இந்த உதவிகளைப் பெற்றுக்கொள்பவர்கள் அவற்றைத் துஷ்பிரயோகம் செய்து விடக்கூடாது.
வாழ்வாதாரத்தைத் தேடிக்கொண்டு அவர்கள் பொருளாதாரத்தில் முன்னேறி வறுமையற்றவர்களாக வாழ வேண்டும். இந்த உதவிகளைப் பயன்படுத்திக் கொண்டு சிறந்த கல்வி, சுகாதாரம் மற்றும் பொருளாதாரம் என்பனவற்றை வறுமைக்குட்பட்டவர்களின் குடும்பம் பெற வேண்டும்.
அரசாங்கத்தினால் மானியமாக அல்லது இலவசமாக வழங்கப்படுகின்ற பயன்பாட்டுப்பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அதன் பின்னர் அப்பயனாளிக்கு எந்தவொரு உதவியும் வழங்கப்படமாட்டாது என்பதுடன், அத்தகைய பயனாளிக்கெதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago