2025 ஜூலை 14, திங்கட்கிழமை

மீனவர் உயிரிழப்பு

Niroshini   / 2015 டிசெம்பர் 06 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா,ரீ.கே.றஹ்மத்துல்லா, எஸ்.கார்திகேசு

அம்பாறை, அறுகம்பை கடலில் மீன்படிக்கச் சென்றிருந்த மீன்பிடிப்படகுடன் மற்றுமொரு பெரிய மீன்பிடிப்படகு வேகமாக சென்று மோதுண்டதில் சிறிய படகும்  அதில் சென்ற மூன்று கடற்தொழிலாளர்களும் கடலில் மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று(06) அதிகாலை 2.00மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை,கடலில் மூழ்கிய இரு மீனவர்களும் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.

இப்படகில் சென்றவர்கள் காலி பிரதேசத்தைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் மேற்படி விபத்துடன் தொடர்பான பெரிய படகு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸாரும் கடற்படையினரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .