Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஜனவரி 10 , மு.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
பைஷல் இஸ்மாயில்
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 1,500 சதுரமீறறர் பரப்புடைய மீனவர்கள் இளைப்பாறும் கட்டடங்களை அமைப்பதற்கும் குறித்த பிரதேசங்களை இணைப்பதற்கு கடலோரப் பாதைகளை நிறுவுவதற்கும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.எம்.சபீஸ், ஞாயிற்றுக்கிழமை (10) தெரிவித்தார்.
கடற்றொழில் மற்றும் நீரில் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர, இந்த உறுதியை வழங்கியதாக அவர் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட கரையோர மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில், அமைச்சர் மஹிந்த அமரவீரவை அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.எம்.சபீஸ் சனிக்கிழமை (09) அவரது அமைச்சில் வைத்து சந்தித்துப் பேசியதன் பின்னரே, அவர் இவ்வாறு தெரிவித்ததாக, முன்னாள் உறுப்பினர் தெரிவித்தார்.
அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
'அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்க்கைத்தரத்தை ஏனைய பிராந்தியத்தில் வாழும் மீனவர்களுடன் ஒப்பிடும்போது, அவர்கள் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றனர். இப்பகுதி கடற்பரப்பில் அரைப்பகுதிக்குமேல், கூரான மலைக் குன்றுகள் காணப்படுவதன் காரணமாக மீனவர்களின் வலைகள் சேதப்படுத்தப்படுகின்றன.
இதன் விளைவாக கடல்வளத்தை முழுமையாகப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது' என்று அவர் தெரிவித்தார்.
மேலும், கடந்த காலங்களில் இக்குறைகளை நிவர்த்தி செய்வதற்கான கள ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை தொடர்பிலும், அமைச்சரிடம் சுட்டிக் காட்டப்பட்டதையடுத்தே அமைச்சரினால் மேற்படி வாக்குறுதியளிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
அத்துடன் அமைச்சின் கீழ் இயங்கும் நாரா நிறுவனத்தின் அதிகாரியை அழைத்து, குறித்த கடற்பரப்பில் காணப்படும் கற்களை வெட்டி அகற்றுவதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும் அமைச்சர் பணிப்புரை வழங்கியதாக அவர் குறிப்பிட்டார்.
29 minute ago
50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
50 minute ago
1 hours ago