2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

மார்ச் 19 இல் ஸ்ரீ.ல.மு.கா தேசிய மாநாடு

Sudharshini   / 2016 பெப்ரவரி 27 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாடு மார்ச் மாதம் 19 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு பாலமுனை அமைப்பாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்சில் தலைமையில் மாநாட்டுத்திட்டமிடல் தொடர்பான கலந்துரையாடலொன்று  பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று (26) நடைபெற்றது.

இம்மாநாட்டில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இக்கலந்துரையாடலில், கிழக்கு மாகாண சுகாதார, சுதேசிய வைத்தியத்துறை அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் விவகார தொழில் வாய்ப்புத்துறை செயலாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம், அட்டாளைச்சேனை பிரதேச கட்சி முக்கியஸ்தர்கள், பாலமுனைப் பிரதேச கட்சிப் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X