2025 மே 21, புதன்கிழமை

மார்புப் புற்று நோய் பற்றிய மாபெரும் விழிப்புணர்வு

Princiya Dixci   / 2016 மார்ச் 02 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

அண்மைக்காலமாக பெண்கள் மத்தியில் அதிகரித்து வரும் மார்புப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு, ஏறாவூர் அல்-மர்கஸுல் இஸ்லாமி தவ்ஹீத் ஜும்மா மஸ்ஜித்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (06) பிற்பகல் 04 மணியளவில்  இடம்பெறவுள்ளதாக அம்பாறை அரச வைத்தியசாலையின் புற்றுநோய் விசேட வைத்திய நிபுணர் ஏ. இக்பால் தெரிவித்தார்.

ஏறாவூரில் முதற் தடவையாக தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் மார்பகப் புற்றுநோய் சம்பந்தமான இந்த விழிப்புணர்வில் பங்குபற்றி அறிவுரைகளைப் பெறுமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

சமகாலத்தில் சமூகத்தின் மத்தியில் காணப்படும் உணவுப் பழக்க வழக்கங்கள், நோய்கள் பற்றிய விழிப்புணர்வின்மை மற்றும் ஆரோக்கிய வாழ்வு பற்றிய அறிவின்மை என்பனவே இதற்குக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .