Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 ஜூன் 01 , மு.ப. 06:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பாலமுனை காட்டுவட்டை படாராக்கல் குளப் பிரதேச விவசாயிகள், தங்களின் விவசாயச் செய்கைக்காக மாற்றுக் காணி வழங்காமையைக் கண்டித்து இன்று புதன்கிழமை கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காட்டுவட்டை படாராக்கல் குளம் காணி இழந்தோர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது மேற்படி சங்கத் தலைவர் ஏ.எம்.ஜௌபர் தெரிவிக்கையில், '1956ஆம் ஆண்டு முதல் சுமார் 20 விவசாயிகள் 120 ஏக்கர் காணியில் விவசாயச் செய்கையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், 1972ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்கத்தால் இக்காணியில் நீர்ப்பாசனக்குளம் அமைப்பதற்கு மாற்றுக் காணி வழங்குவதாகக் கூறி எங்களின் விவசாயக் காணி சுவீகரிக்கப்பட்டது.
ஆனால், காணியை இழந்த எங்களுக்கு எந்தவித நட்டஈடோ, நிவாரணமோ இதுவரையில் வழங்கப்படவில்லை' என்றார்.
'இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுத்தருமாறு கோரி அரசியல்வாதிகளிடம்; சென்றால், தீர்வு பெற்றுத்தருவதாக வாக்குறுதி அளிப்பார்கள். பின்னர் இதை நிறைவேற்ற மறந்து விடுவார்கள்.
அக்காணியில் அமைக்கப்பட்ட நீர்ப்பாசனக்குளம் தற்போது தூர்ந்து போன நிலையில் உள்ளது' என்றார்.
'இந்த நல்லாட்சி அரசாங்கம் எங்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுத்தர வேண்டும்' எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தின் இறுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துஷித பி.வணிகசிங்க உள்ளிட்டோருக்கு கையளிப்பதற்கான மகஜர் அட்டாளைச்சேனை உதவிப் பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜிடம் படி சங்கத் தலைவர் ஏ.எம்.ஜௌபர் வழங்கிவைத்தார்.
34 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
3 hours ago
4 hours ago