2025 மே 21, புதன்கிழமை

மௌலவி ஆசிரியர் நியமனங்களை வழக்கக் கோரி தனிநபர் பிரேரணை

Suganthini Ratnam   / 2016 மார்ச் 13 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா,எம்.எஸ்.எம்.ஹனீபா

கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக வெற்றிடமாகவுள்ள மௌலவி ஆசிரியர் நியமனங்களை வழங்குமாறு கோரும் அவசர தனிநபர் பிரேரணையை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள மாகாண சபை அமர்வில் தான் முன்வைக்கவுள்ளதாக அம்மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை, இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 'தேசிய பாடசாலைகள் மற்றும் மாகாணப் பாடசாலைகளிலும் காணப்படும் வெற்றிடங்களுக்கமைய 5,000 க்கும்  மேற்பட்ட ஆசிரியர் நியமனங்களை வழங்க ஏற்பாடு மேற்கொள்ளப்படுவதாகத் தெரியவருகின்றது. இந்தத் திட்டத்தின் கீழ் மௌலவி ஆசிரியர் நியமனங்களையும் வழங்குமாறு கிழக்கு மாகாண சபையைக் கோரி பிரேரணை முன்வைக்கவுள்ளேன்' என்றார்.

'நீண்டகாலமாக வெற்றிடமாகக் காணப்படும் மௌலவி ஆசிரியர் நியமனங்களில் தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட மௌலவி ஆசிரியர்; நியமனங்களை வழங்க வேண்டிய தேவை காணப்படுகின்றது.  

நீண்டகால இடைவெளியின் பின்னர் 151 மௌலவி ஆசிரியர் நியமனங்களை மாத்திரமே கடந்த அரசாங்கம்  வழங்கியது. மௌலவி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படாமையால் பாடசாலைகளில் முஸ்லிம் மாணவர்கள் இஸ்லாம் பாடத்தைக் கற்க முடியாமல் சிரமத்தை எதிர்நோக்குவதாகவும் தெரியவருகின்றது' எனவும் அவர் கூறினார்.   

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .