2025 ஜூலை 16, புதன்கிழமை

மீள்குடியேற்ற அதிகார சபையின் பணிப்பாளர் நியமனம்

Gavitha   / 2015 டிசெம்பர் 13 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.எம்.எம்.ஏ.காதர்

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு மீள்குடியேற்ற மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சின் கீழுள்ள மீள்குடியேற்ற அதிகார சபையின் பணிப்பாளர் சபை பணிப்பாளராக மருதமுனையைச் சேர்ந்த கலாநிதி வஸீர் ஹூசைன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின், விஷேட பணிப்புரைக்கு அமைவாக, அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனால் கலாநிதி வஸீர் ஹூசைன் நியமிக்கப்பட்டுள்ளார். 2015-12-02ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இருக்கான நியமனக் கடிதத்தை, மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புள்ளாஹ் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கடந்த வியாழக்கிழமை (10) வழங்கி வைத்துள்ளார்.

கலாநிதி  வஸீர் ஹூசைன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கல்முனைத் தொகுதிக்கான தேர்தல் பணிகளுக்கு பொறுப்பான அமைப்பாளர் ஆவார்.   

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .