2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

மீளப் பெறப்பட்ட நிதியை வழங்க நடவடிக்கை

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 25 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

கிழக்கு மாகாண கல்வியமைச்சின் கீழ், அட்டாளைச்சேனை அரபா வித்தியாலயத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு மீளப் பெற்றுக்கொள்ளப்பட்ட 05 மில்லியன் ரூபாய் நிதியை மீண்டும் ஒதுக்கீடு செய்து வழங்குவதற்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் உறுதியளித்துள்ளதாக மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

கிழக்கு மாகாண கல்வியமைச்சின் அறிவு சார்ந்த சமூகத்துக்கான திட்டத்தின் கீழ் அட்டாளைச்சேனை அரபா வித்தியாலயத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட  06 மில்லியன் ரூபாய்  நிதி, இறுதியில் வேறு மாவட்டப் பாடசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டது.

இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாணக் கல்வியமைச்சர் எஸ்.தாண்டாயுதபாணிக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை கடிதம் அனுப்பியிருந்தார். இதனைத் தொடர்ந்து, அட்டாளைச்சேனை அரபா வித்தியாலயத்துக்கு நிதி வழங்குவதற்கு மாகாண முதலமைச்சர் உறுதியளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X