2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

மொழிப் பிரச்சினையே வேறுபாட்டுக்கு காரணம்

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 10 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

இந்த நாட்டிலுள்ள பெரும்பான்மையின மக்களுக்கும் தமிழ் மக்களுக்குமிடையிலான வேறுபாட்டுக்கும் பிரச்சினைக்கும் காரணமாக இருப்பது மொழிப் பிரச்சினையே ஆகுமென திருக்கோவில், அக்கரைப்பற்று உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கே.ஜே.எஸ்.கருணாசிங்க தெரிவித்தார்.

பெரும்பான்மையின மக்களுக்கு தமிழ்மொழியும் தமிழ் மக்களுக்கு சிங்களமொழியும் தெரியுமானால், எமக்குள் இருக்கின்ற உணர்வை புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். அப்போது அநேகமான பிரச்சினைகளுக்கு இலகுவாக தீர்வு கிடைக்கக்கூடியதாக இருக்குமெனவும் அவர் கூறினார்.

திருக்கோவில் பிரதேச சிவில் பாதுகாப்புக் குழுக்களுக்கிடையிலான சந்திப்பு, தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (09) மாலை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'பெரும்பான்மையின மக்களும் தமிழ் மக்களும் மனிதர்களே. ஆனால், எமக்குள் இருக்கும் வேறுபாட்டுக்கு காரணம் மொழி. இதனை நீங்களும் நாங்களும் புரிந்துகொள்வோமாயின், எமக்குள் இருக்கின்ற பல பிரச்சினைகளுக்கான தீர்வை நாங்களாகவே பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X