2025 ஜூலை 14, திங்கட்கிழமை

மசூர் மௌலானா காலமானார்

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 04 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பி.எம்.எம்.எ.காதர்

கல்முனை மாநகரசபையின் முன்னாள்; மேயர் செனட்டர் மசூர் மௌலானா தனது 84ஆவது வயதில் கொழும்பில்  இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை காலமானார்.

மருதமுனையில் இவரது  ஜனாசா  நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மருதமுனையை பிறப்பிடமாகக் கொண்ட இவர், ஆரம்பக்கல்வியை மருதமுனை அல்மனார் மகா வித்தியாலயத்தில் கற்றார். ஆறாம் வகுப்புத் தொடக்கம் உயர்தர வகுப்புவரை  மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்திலும் மட்டக்களப்பு மத்திய கல்லூரியிலும் ஆங்கிலமொழியின் மூலம் கல்வி கற்றார். பின்னர் அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற தமிழ்ப் பேச்சுப் போட்டியில் வென்று தங்கப்பதக்கம் பெற்றார்.

மேலும், இவர் தனது 17ஆவது வயதில் தந்தை செல்வநாயகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழரசுக் கட்சியில் இணைந்து அரசியல் மேடைகளில் பிரசாரம் செய்தார். அதன் பின்னர், 1960ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் தமிழரசுக் கட்சி சார்பாக கல்முனைத்தொகுதியில் போட்டியிட்டிருந்தார்.

1966ஆம் ஆண்டு  மருதமுனை மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் கரவாக வடக்கு கிராம சபையின் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டார். அன்று தொடக்கம் 1974ஆம் ஆண்டு வரை தலைவராக கடமையாற்றியிருந்தார்.

இருளில் மூழ்கிக்கிடந்த மருதமுனை கிராமத்துக்கு மின்சாரத்தைக் கொண்டுவந்து ஒளியூட்டினார். அம்பாறை மாவட்டத்தில் முதலாவது தெருவிளக்கை அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சாரும்.  மேலும், பொதுநூலகத்தை  மருதமுனையில் அமைத்தார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினராகவும்; கல்முனை மாநகர மேயராகவும் இவர் கடமையாற்றியிருந்தார். இறுதி அரசியல் பயணத்தை முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து தொடர்ந்தமை குறிப்பிடத்தக்கது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .