2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

மணல் ஏற்றிய இருவருக்கு அபராதம்

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 24 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் அஷ்ரப் நகர் பள்ளக்காடு பிரதேசத்தில் அனுமதிப்பத்திரம் இல்லாமல் டிப்பர் வாகனத்திலும்  உழவு இயந்திரத்திலும் ஆற்று மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கைதுசெய்யப்பட்ட இருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

டிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றியவருக்கு  50 ஆயிரம் ரூபாய் அபராதமும் உழவு இயந்திரத்தில் மணல்  ஏற்றியவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் அக்கரைப்பற்று மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.முஹம்மட் பஸீல்  விதித்துள்ளார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X