2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்தியவருக்கு அபராதம்

Niroshini   / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

மதுபோதையில் கவனயீனமாக மோட்டார் சைக்கிளை செலுத்திய நபரொருவருக்கு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எல்.ஏ.றஸீட் நேற்று (09) பத்தாயிரத்து ஐநூறு ரூபாய் அபராதம் விதித்ததுடன் ஆறு மாதங்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரத்தை பாவிப்பதற்கும் தடை விதித்து தீர்ப்பளித்தார்.

அக்கரைப்பற்று பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் அக்கரைப்பற்று நகர் மணிக்கூட்டு கோபுரத்துக்கு அருகில் செவ்வாய்க்கிழமை (08) மாலை கடமையில் இருந்த வேளையில், அக்கரைப்பற்று நகரை நோக்கி வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்த போதே குறித்த நபரை கைது செய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .