Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Niroshini / 2016 ஓகஸ்ட் 11 , பி.ப. 02:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும், நீதவான் நீதிமன்ற நீதவானுமான திருமதி நளினி கந்தசாமி, சாரதி அனுமதிப் பத்திரத்தை 06 மாதங்களுக்கு இரத்துச் செய்யுமாறும் இன்று வியாழக்கிழமை (11) உத்தரவிட்டுள்ளார்.
குறித்த நபர் தொடர்பில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த திருக்கோவில் பொலிஸார் குறித்த நபரை நேற்று (10) புதன்கிழமை, கைது செய்தனர்.
அத்துடன், திருக்கோவில் பிரதேசத்தில் மது போதையில் உழவு இயந்திரத்தை செலுத்தி குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சாரதி ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததுடன், சாரதி அனுமதிப் பத்திரத்தினை 06 மாதங்களுக்கு இரத்துச் செய்யுமாறும், 100 மணித்தியாலங்கள் சமூக சீர்திருத்த பணியில் ஈடுபடுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
18 May 2025