2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

மருதமுனை அல்மனார் வித்தியாலய அபிவிருத்திக்கு நிதி

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 03 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

மருதமுனை அல்மனார் வித்தியாலயத்தின் அபிவிருத்திக்காக 05 இலட்சம் ரூபாவை 2016ஆம் ஆண்டின் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் வழங்கவுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.

அத்துடன், மாணவர்களுக்காக திறந்துவைக்கப்படவுள்ள பல் சிகிச்சை வைத்தியப்  பிரிவுக்கு வைத்தியர் ஒருவரையும் அதற்கான ஆளணியையும் வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாகவும் அவர் கூறினார்.

மருதனைமுனைப் பிரதேசத்திலுள்ள அனைத்துப் பாடசாலை மாணவர்களும் இச்சிகிச்சை பெறமுடியுமெனவும் தெரிவிக்கபடுகின்றது.  

மருதமுனை அல்மனார் வித்தியாலயத்தில் இம்முறை க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்கும் தோற்றவுள்ள மாணவர்களை வாழ்த்தி வழியனுப்பும் விழா, அவ்வித்தியாலயத்தில் புதன்கிழமை (02) நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X