2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மருந்துக்கலவையாளர்களுக்கு நேர்முகப் பரீட்சை

Suganthini Ratnam   / 2016 மே 17 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

2013 -2014ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மூன்றரை மாத மருந்துக் கலவையாளர் பயிற்சியை பூர்த்திசெய்த கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 29 மருந்துக் கலவையாளர்களுக்கான நேர்முகப் பரீட்சை நாளை மறுதினம் வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில் நடைபெறவுள்ளது.

தேசிய அடையாள அட்டை, முதல் நியமனக்கடிதம், சேவையில் உறுதிப்படுத்தப்பட்ட கடிதம், கல்விச் சான்றிதழ்கள் (க.பொ.த. சாஃத), க.பொ.த. உஃத), மருந்துக் கலவையாளர் பயிற்சிச் சான்றிதழ், குறித்த நிறுவனத்; தலைவரிடமிருந்து பெறப்பட்ட அறிக்கை ஆகியவற்றுடன் நேர்முகப் பரீட்சைக்கு சமூகமளிக்க வேண்டும் என சுகாதார, சுதேச, சமூக நலன்புரி மற்றும் நன்னடத்தை சிறுவர் பராமரிப்புச் சேவைகள் அமைச்சின் உதவிச் செயலாளர் ஜே.ஹூசைனுதீன் தெரிவித்தார்.

இலங்கையில் முதன்முறையாக தமிழ்மொழி மூல மருந்துக் கலவையாளர் பயிற்சியைப் பூர்த்தி செய்தவர்களுக்கே நேர்முகப் பரீட்சை நடைபெறவுள்ளது.  

அம்பாறையில் எட்டுப் பேரும் மட்டக்களப்பில் 16 பேரும் திருகோணாமலையில் ஐந்து பேரும் நேர்முகப் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X