Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 17 , மு.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர்; மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் மரணித்து 15 வருடங்கள் நிறைவடைவதையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு, நிந்தவூரிலுள்ள மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தில் புதன்கிழமை (16) நடைபெற்றது.
இதன்போது, 'மறைந்தும் மறையாத மாபெரும் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப்' என்ற தலைப்பில் நினைவுப் பேருரையையும் தூஆப் பிரார்த்தனையையும் நடைபெற்றது. மறைந்த தலைவர் ஆற்றிய சேவை, அரசியல் பயணம், மறைவு, அதற்கு பின்னரான அரசியல் என்பன தொடர்பிலும் இங்கு உரைகள் இடம்பெற்றன.
தொழிற்பயிற்சி அதிகாரசபையின் மாவட்ட உதவிப் பணிப்பாளர்;களான ரீ.வினோதராஜா, வீ.கனகசுந்தரம் ஆகியோர்; முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.ரி.ஜப்பார் அலி பிரதம உரையாற்றினார். ஊடகவியலாளர் ஏ.எல்.நிப்றாஸ் திறனாய்வு உரை நிகழ்த்தியதுடன், கவிஞர் யூ.எல்.ஹஸனார் ஷகாப் 'ஒரு ஆத்மாவின் குமுறல்' என்ற தலைப்பில் கவிதை வாசித்தார்.
மறைந்த தலைவருக்காக றசீட் மௌலவி விஷேட தூஆப் பிரார்;த்தனை நிகழ்த்தினார். ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் செயலாளர் எம்.எம்.மஹ்சூன் நன்றியுரையாற்றினார். மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தின் உத்தியோகத்தர்;கள், மாணவ மாணவியர் என பலர் கலந்து கொண்டனர்.
,
23 minute ago
29 minute ago
46 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
29 minute ago
46 minute ago
1 hours ago