2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

மரக்கன்றுகள் நடும் வைபவம்

Niroshini   / 2015 ஒக்டோபர் 22 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

தேசிய மரநடுகை மாதத்தை முன்னிட்டு அட்டாளைச்சேனை பிரதே செயலகத்தில் மரக்கன்றுகள் நடும் வைபவம் இன்று வியாழக்கிழமை பிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்றது.

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமீல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலத்தில் அரசாங்க அதிபர் துசித பி வணிக சிங்க தலைமையிலும் மாவட்டத்திலுள்ள 20 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பிரதேச செயலாளர்களின் தலைமையிலும் இந்த நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

மேலும், பாடசாலைகள், அரச, அரசார்பற்ற சகல நிறுவனங்கள், திணைக்களங்களங்களிலும் இந்த தேசிய மரநடுகை மாதத்தை முன்னிட்டு மரக்கன்றுகளை நடுவதற்கான அறிவுறுத்தல்கள் அரசாங்கத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X