2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

யானை உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 26 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

திருக்கோவில் வனஜீவராசிகள் திணைக்களப் பிரிவுக்குட்பட்ட தங்கவேலாயுதபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை (25) இரவு 06 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று உயிரிழந்துள்ளதாக அத்திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இந்த யானை பொறிவெடியில் சிக்கிய நிலையில் அதன் வாயில் காயம் ஏற்பட்டிருக்கலாமென்று சந்தேகிக்கப்படுகின்றது. இதனால் இந்த யானை 03 வாரங்களுக்கும் மேலாக உணவு உட்கொள்ளவோ, நீர் அருந்தவோ முடியாதிருந்தது.

இந்த யானைக்கு அம்பாறை வன ஜீவராசிகள் திணைக்கள மருத்துவர்கள் வாய் மற்றும் கால் பகுதிகளில் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை அளித்து வந்திருந்தனர்.

திருக்கோவில் பிரதேசத்தில் இந்த வருடத்தில்  இதுவரையில்  10 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X