2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

யானைகளை விரட்ட காவலாளிகள்

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 26 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

சம்மாந்துறைப் பிரதேசத்தினுள் நுழையும் காட்டு யானைகளை விரட்டுவதற்கு 10 காவலாளிகளை நியமிப்பதற்கும் அவர்கள் அப்பிரதேசத்திலுள்ள வட்ட விதானைமார்களுடனும் பிரதேச விவசாய குழுக்களுடனும் இணைந்து யானைகளின் ஊடுருவலை தடுக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். அத்துடன்,  காவலாளிகளுக்கான சம்பளம் விவசாயிகளிடம் அறவிடப்பட்டு விவசாய அமைப்புகளினூடாக வழங்குவதற்கும் இதனைக் கட்டுப்படுத்த 51 பேரைக் கொண்ட பொதுச்சபை நடவடிக்கை மேற்கொள்வதெனவும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

சம்மாந்துறைப் பிரதேச செயலகப் பிரிவில் வேளாண்மை செய்கை மேற்கொண்டுள்ள விவசாயிகள் எதிர்கொள்ளும் காட்டு யானைகளின் தொல்லையை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (25) மாலை சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

சம்மாந்துறை கமநல சேவைகள் மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், வட்ட விதானைமார்கள், வன ஜீவராசி பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதன்போது நீர்ப்பாசனம், உரமானிய விநியோகம் என்பன தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X