2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

யானை தாக்கி ஆசிரியர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 22 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் மௌலானா,கனகராசா சரவணன்

அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நைனாகாடுப் பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை காலை யானையின் தாக்குதலுக்குள்ளாகி ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கருவாக்கல் பகுதியைச் சேர்ந்த கலந்தர்லெப்பை முஹம்மத்தம்பி முஹம்மத் இர்பான் (வயது 30) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் இறக்காமம், வரிப்பத்தாஞ்சேனையிலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்பிக்கின்றார்.

நைனாகாடு பள்ளக்காடு பகுதியிலுள்ள தனது வயலுக்குச்  சென்றபோதே, இவர் யானையின் தாக்குதலுக்கு உள்ளானதாக  பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X