2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

யானை தாக்கி ஒருவர் காயம்

Suganthini Ratnam   / 2016 ஜூன் 27 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வசந்த சந்திரபால

அம்பாறை, உகண கரங்காவ கிராமத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளான ஒருவர் அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் உகணப் பிரதேசத்தைச் சேர்ந்த டபிள்யூ.ஏ.சம்பத் என்பவரே காயமடைந்துள்ளார்.

வீதியை குறுக்கத்துச் சென்றுகொண்டிருந்த இந்த யானை மீது மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இவர் மோதிக் கீழே விழுந்துள்ளார். இதன்போது இவரது தலையை யானை தனது காலால் மிதித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பொதுமக்களின் உதவியுடன் இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X