2025 மே 20, செவ்வாய்க்கிழமை

யானையின் தாக்குதலில் ஒருவர் காயம்

Suganthini Ratnam   / 2016 ஜூன் 06 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட சாகாமம் கிராமத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி கணபதிப்பிள்ளை தங்கராசா (வயது 66) திருக்கோவில் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவ்வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், யானையின் தாக்குதலில் மூன்று ஆடுகள் காயமடைந்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட நபரின் வீடும் முற்றாகச் சேதமாக்கப்பட்டுள்ளது.

மேற்படி கிராமத்தினுள் இன்று திங்கட்கிழமை அதிகாலை புகுந்த காட்டு யானை, பாதிக்கப்பட்ட நபரின் வீட்டின் பின்புறத்தை தாக்கிய வேளையில் இவரும் இவரது மனைவியும் அங்கிருந்து தப்பியோட முற்பட்டுள்ளனர். இதன்போதே இவர் யானையின் தாக்குதலுக்கு உள்ளானார்.

இருப்பினும், இவரது மனைவி பாதுகாப்பாகத் தப்பியுள்ளார்.  

இந்தச் சம்பவம் தொடர்பில் திருக்கோவில் பிரதேச செயலகத்தின் உதவிப் பிரசே செயலாளர் எஸ்.ஜெயரூபன், கிராம அலுவலர் உள்ளிட்டோருக்கு  அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X