Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Princiya Dixci / 2021 ஜூன் 09 , பி.ப. 07:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
கொரோனா தொற்றுக் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள, வருமானம் குறைந்த குடும்பங்களில் 5,000 ரூபாய் கொடுப்பனவுப் பட்டியலில் உள்ளடக்கப்படாதவர்கள் மேன்முறையீடு செய்யலாமென, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும், மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளருமான வி.ஜெகதீசன் தெரிவித்தார்.
கிராம சேவகர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களைத் தொடர்புகொண்டு, 5,000 ரூபாய் கொடுப்பனவுப் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதா என வருமானம் குறைந்த குடும்பங்கள் உறுதிப்படுத்தியதன் பின்னர் அக்கொடுப்பனவுக்கான மேன்முறையீடு செய்ய முடியுமென அவர் தெரிவித்தார்.
மேன்முறையீடு செய்வதற்கான விண்ணப்பப் படிவத்தை உரிய முறையில் பூர்த்தி செய்து, சம்மந்தப்பட்ட பிரதேச செயலகங்களில் ஒப்படைக்களாமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
20 minute ago
3 hours ago
3 hours ago