2025 மே 22, வியாழக்கிழமை

வைக்கோல் விற்பதை நிறுத்தவும்

Suganthini Ratnam   / 2016 மார்ச் 06 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை மாவட்டத்தில் பெரும்போகச் செய்கை அறுவடையின் பின்னர் வைக்கோலை தனியாருக்கு விற்பனை செய்வதை நிறுத்துமாறு விவசாயத் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.கலீஸ், இன்று ஞாயிற்றுக்கிழமை பணித்துள்ளார்.

நிந்தவூர், அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசங்களில் அறுவடையின் பின்னர் வைக்கோலை தனியார் நிறுவனமொன்றுக்கு சிறுதொகைக்கு விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

வயல் நிலங்களுக்கு சேதனப் பசளையாகப் பயன்படுத்த வேண்டிய வைக்கோலை விற்பனை செய்வதால், நிலத்தில் சேதனப் பசளையின் தன்மை இல்லாமல் போகக்கூடிய நிலைமை ஏற்படும். இதனால், எதிர்காலத்தில் குறைந்த விளைச்சலையே பெற முடியும்.

வைக்கோலை வயலில் இட்டு உழுவதால் வைக்கோலிலுள்ள நைதரசன், பொட்டாசியம், பொஸ்பரஸ் போன்ற பதார்த்தங்கள் நிலத்துடன் சேர்வதால் அதிக விளைச்சலைப் பெற முடியுமென்பதுடன், வேளாண்மையின்போது ஏற்படக்கூடிய நோய்த்தாக்கமும் குறைந்து காணப்படுமெனவும் அவர் கூறினார்.

எனவே, விவசாயிகள் வைக்கோலை விற்பனை செய்யாது சேதனைப் பசளையாக வயல் நிலங்களில்  இடுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .