Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2015 நவம்பர் 27 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லாம் மௌலானா, எம்.எஸ்.எம்.ஹனீபா
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து தொழில் மற்றும் ஏனைய தேவைகளுக்காக உலகம் முழுவதும் வாழும் சுமார் 20 இலட்சம் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் வசதிகளை எமது அரசாங்கம் செய்து கொடுக்க வேண்டும் என்று தனிநபர் பிரேரணையை கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.ஏ.பஷீர் சபையில் முன்வைத்தார்.
கல்முனை மாநகரசபையின் மாதாந்த அமர்வு வியாழக்கிழமை (26) மாநகர முதல்வர் சட்ட முதுமாணி நிஸாம் காரியப்பர் தலைமையில் நடைபெற்றது., ;
இங்கு மாநகரசபை உறுப்பினர் ஏ.ஏ.பஷீர் உரையாற்றுகையில், 'புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வாக்களிக்கும் வசதி செய்து கொடுக்கப்படவேண்டும். இந்த நாட்டையும் எமது பிரதேசத்தையும் பொருளாதார ரீதியாக தாங்கி நிற்கும் ஒரு உயிர் நாடி, புலம்பெயர் தொழிலாளர்களின் வருமானம் அனைவருக்கும் தெரியும். ஏறத்தாழ 20 இலட்சம் இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மத்திய கிழக்கிலும் ஏனைய நாடுகளிலும் எமக்காகவும் எமது உறவுகளுக்காகவும் பல தியாகத்திற்கு மத்தியில் பல தசாப்தங்களாக தொழில் புரிந்து வருகின்றனர்.
வாக்களிக்கும் வசதி என்பது புலம்பெயர் சமூகத்தின் அபிலாஷைகளின் திறவுகோல்.
எனவே, வாக்குரிமை எனும் விடயத்தில் எமது புலம்பெயர் தொழிலாளர்களுக்காக உதவிக்கரம் நீட்டுவது இங்கே வாழும் உறவுகளாகிய எமக்கும் ஆட்சியாளார்களுக்கும் கடமையாகியுள்ளதை உணர்கின்றேன்.
எமது புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வாக்களிக்கும் வசதி செய்து கொடுக்கப்பட்டால், தேர்தல் விஞ்ஞாபனங்களினூடாக அவர்களின் அபிலாசைகள் தீர்க்கப்படும் என்கின்ற அளப் பெரிய நம்பிக்கை உள்ளது. மேலும், இந்த நாட்டில் எந்த ஒரு சமூகமும் தனது வாக்குகளை மூலதனமாக கொண்டே தனக்குரிய ஜனநாயக உரிமையையும் ஆரோக்கியமான சமூக இருப்பையும் உறுதிப்படுத்துகின்றன . அந்த வகையில், வாக்களிக்கும் வசதி என்பது மூவின புலம்பெயர் தொழிலாளர்களினதும் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு வித்தாகிவிடும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. எனவே புலம்பெயர் தொழிலாளர்களின் தேர்தல் வாக்களிப்பு வசதியை செயற்படுத்திக் கொடுக்க ஆதரவு அளிக்குமாறு இந்த சபையை மிகத் தாழ்மையுடன் வேண்டுகிறேன்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago