2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

வீட்டுக்கு தீ வைப்பு

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 20 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்  

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலையடிவேம்புக் கிராமத்திலுள்ள வீடொன்றின் கூரையைப் பிய்த்துக்கொண்டு உட்புகுந்த திருடன் வீட்டிலுள்ள பொருட்களுக்கு தீ மூட்டிச் சென்றுள்ளமை தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை காலை முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த வீட்டின் உரிமையாளர்கள் திருமண வைபவத்தில் கலந்துகொள்வதற்காக இந்தியாவுக்குச் சென்றுள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை (19) இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக உறவினர்கள் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

வீட்டைப் பார்ப்பதற்காக இன்றையதினம் காலை சென்றபோது, அங்கு பரவியிருந்த தீயை அணைத்ததாகவும் உறவினர்கள் கூறினர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X