2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

வீட்டினுள் அத்தமீறி நுழைந்த மூவர் பெண் மீது பாலியல்வல்லுறவு

Niroshini   / 2015 நவம்பர் 01 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-எஸ்.ஜமால்டீன்

அக்கரைப்பற்று,ஒலுவில் பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை நள்ளிரவு உள்ள வீடொன்றுக்குள் அத்துமிறி நுழைந்து 32 வயதுடைய பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய மூவரை கைதுசெய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ள நிலையில் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் 9 ஆம் பிரிவிலுள்ள தனது வீட்டில் சகோதரனுடனும் மூன்று பிள்ளைகளுடனும் வாழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில்,சம்பவத்தினத்தன்று நள்ளிரவு வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டுள்ளது நித்திரையில் இருந்து எழும்பி கதவை திறந்த போது உள்ளே நுழைந்த மூவர் சகோதரனை அறை ஒன்றுக்குள் கட்டிவைத்து விட்டு மூவரும் பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்டப் பெண் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .