2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

வீடு தீக்கிரை

Suganthini Ratnam   / 2016 மே 16 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

அம்பாறை, அக்கரைப்பற்று எட்டாம் பிரிவிலுள்ள வீடு ஒன்று இன்று திங்கட்கிழமை அதிகாலை  இனந்தெரியாதோரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இந்த வீட்டு உரிமையாளரான 43 வயதுடைய குடும்பஸ்தர் பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் கடந்த வாரம் மட்டக்களப்புச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இவ்வீட்டிலுள்ள ஏனையோர்; உறவினர் வீட்டில் தங்கியுள்ளனர். இந்த வீட்டில் எவரும் இல்லாத வேளையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த வீட்டில் தீப்பிடித்தமையைக் கண்டு அயலவர் ஒருவர், பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். இதனை அடுத்து, அயலவர்கள் மற்றும் அவ்வீட்டைச் சேர்ந்தவர்களின் உதவியுடன் பொலிஸார் தீயை அணைத்துள்ளனர்.

இதன்போது, வீட்டுக் கூரையின் ஒரு பகுதியும்  அறை ஒன்றும் வரவேற்பு அறையும் வீட்டிலிருந்த  உடைமைகளும் தீக்கிரையாகியுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X