Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 01 , மு.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் மௌலானா
பிரதேச செயலகப் பிரிவுகள் தோறும் வீடமைப்புத்திட்டத்தை மேற்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதைத் தொடர்ந்து அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, நிந்தவூர் ஆகிய பிரதேசங்களில் வீடமைப்புத்திட்டத்துக்குரிய இடங்களை அடையாளம் காண்பதில் சிரமம் காணப்படுவதாக ஸ்ரீ லங்கா முஸ்;லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நிந்தவூர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பிரதியமைச்சருமான பைஷால் காசீம் தெரிவித்தார்.
நிந்தவூர் பிரதேச செயலகப் பிரிவில் வசதி குறைந்த 55 குடும்பங்களுக்கு தலா குடும்பத்துக்கு 10 சீமெந்து பக்கெட்டுகள் படி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் திங்கட்கிழமை (30) வழங்கப்பட்டன. இதன்போதே அவர் இதனைக் கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், 'நல்லாட்சி அரசாங்கம் ஏழை மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கு பிரயத்தனம் எடுத்து வருகின்றது. அந்த வகையில், ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவுகள் தோறும் புதிய வீடமைப்புக்கான மீள்ளெழுச்சிக் கிராமத்தை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதைத் தொடர்ந்து, சில இடங்களில் அந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், எமது பகுதிகளில் இவ்வாறான வீடமைப்புத்திட்டத்தை மேற்கொள்வதற்கான இடங்களை அடையாளம் காண்பதில் சிரமம் காணப்படுகிறது' என்றார்.
கல்முனை, நிந்தவூர் போன்ற பகுதிகளில் சனநெரிசல் அதிகமாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
56 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
3 hours ago
3 hours ago